மோடி நிறைவேற்றிய வாக்குறுதிகளை நினைத்து வாக்களியுங்கள் - சோனியா காந்தி வேண்டுகோள்

கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றினாரா என்பதை நினைவில் வைத்து வாக்களிக்குமாறு மக்களை சோனியா காந்தி கேட்டுக்கொண்டார்.
மோடி நிறைவேற்றிய வாக்குறுதிகளை நினைத்து வாக்களியுங்கள் - சோனியா காந்தி வேண்டுகோள்
x
வங்கி கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவது முதல் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பது வரை கொடுத்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றினாரா என்பதை நினைவில் வைத்து வாக்களிக்குமாறு மக்களை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டார். உத்திர பிரதேச மாநிலம் ரேபரேலியில் தனது மகளும்,  கிழக்கு உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியுடன் ஒன்றாக கூட்டத்தில் பங்கேற்ற அவர், வாக்குரிமை என்பது மக்கள் கைகளில் உள்ள முக்கியமான பலம்வாய்ந்த ஆயுதம் என்று குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்