"கிராமப்புற பெண்களுக்கு இலவச செல்போன்" - சந்திரபாபு நாயுடு தேர்தல் அறிக்கை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை, வட்டியில்லா விவசாய கடன் என்பன உள்ளிட்ட தேர்தல் அறிக்கையை ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்டுள்ளது.
கிராமப்புற பெண்களுக்கு இலவச செல்போன் - சந்திரபாபு நாயுடு தேர்தல் அறிக்கை
x
ஆந்திராவில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திர பாபு நாயுடு வெளியிட்டார். அதில் நகரம் வாரியாக தொழிற்பூங்காக்களும், உணவு பூங்காக்களும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை மற்றும் முதியோர் ஓய்வூதிய தொகை ஆகியவை 3 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. விவசாயத்துக்கு 12 மணிநேர இலவச மின்சாரம், கிராமப்புற பெண்களுக்கு இலவச செல்போன், வட்டியில்லா விவசாய கடன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். நாட்டின் 5வது பெரிய நகரமாக அமராவதி உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளா​ர். 

Next Story

மேலும் செய்திகள்