வயநாட்டில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார்.
வயநாட்டில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் ராகுல் காந்தி
x
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்கிறார். ராகுல் காந்தி அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வயநாடு தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் நேற்றிரவு கோழிக்கோட்டிற்கு வந்தார். கோழிக்கோட்டிலிருந்து இன்று காலை வயநாடு வரும் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னர் பிரம்மாண்டமான 
சாலைப் பேரணி ஒன்றை நடத்துகிறார். நேற்றிரவு விமான நிலையத்தில் ராகுல் காந்திக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதலே தொண்டர்கள் வயநாட்டில் குவியத் தொடங்கியுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்