ஆந்திர அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கும் திருப்பதி தேவஸ்தானம் - ஜூன் 8 முதல் பக்தர்களை அனுமதிக்க ஏற்பாடுகள் தீவிரம்

வழிபாட்டு தலங்களை ஜூன் 8 முதல் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் மாநில அரசின் முறையான அறிவிப்புக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் காத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆந்திர அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கும் திருப்பதி தேவஸ்தானம் - ஜூன் 8 முதல் பக்தர்களை அனுமதிக்க ஏற்பாடுகள் தீவிரம்
x
கொரோனா தொற்று பரவலை அடுத்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வர பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏழுமலையானுக்கு நடைபெறக் கூடிய ஆறுகால பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று அறிவிக்கப்பட்ட  ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், உணவு விடுதிகள் போன்றவற்றிற்கு தளர்வை  மத்திய அரசு அ​றிவித்துள்ளது. இந்நிலையில் மாநில அரசு உத்தரவுக்காக திருப்பதி தேவஸ்தானம் காத்திருப்பதாகவும், உத்தரவு வந்த உடன் பக்தர்களை கோவிலுக்கு அனுமதிக்க தேவையபன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 6 முதல் 8 அடி தூரம் வரை சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏதுவாக, கோவிலுக்கு செல்லும் வழி எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல்  திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பக்தர்களுக்கும், திருமலையில் வரிசையில் செல்லும் பக்தர்களுக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  முக கவசம் மற்றும் கையுறைகள் அணிய  வேண்டும் என்ற நிபந்தனைகளையும் கட்டாயம் கடைபிடிக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மாநில அரசிடம் இருந்து அறிவிப்பு வெளி வரும் நிலையில், வரும் திங்கள் முதல் ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்