அயோத்தி வழக்கு : 18 சீராய்வு மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி

அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, உத்தரவிட்டுள்ளது.
அயோத்தி வழக்கு : 18 சீராய்வு மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம் அதிரடி
x
அயோத்தி வழக்கில் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 18 சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, உத்தரவிட்டுள்ளது. அயோத்தி வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி இருந்தது. சர்ச்சைக்குரிய 2 புள்ளி ஏழு ஏழு ஏக்கர் நிலம் இந்துக்களுக்கு சொந்தம் என அறிவித்த உச்சநீதிமன்றம், மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், 18 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே  தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 18 சீராய்வு மனுக்களையும் தள்ளுபடி செய்து, உத்தரவு பிறப்பித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்