மூணாறில் கனமழை - திடீர் மண் சரிவு

மூணாறில் உள்ள லக்காடு கேப் சாலையில் கனமழை காரணமாக திடீர் மண் சரிவு ஏற்பட்டது.
மூணாறில் கனமழை - திடீர் மண் சரிவு
x
தேனி அருகே உள்ள மூணாறில் பெய்த கனமழை காரணமாக லக்காடு கேப் சாலையில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உருண்டு விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாறை உடைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். மண்சரிவால் பாறைகள் விழுந்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த லாரி முற்றிலும் சேதம் அடைந்தது. இதைத்தொடர்ந்து லக்காடு கேப் சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. மண்சரிவில் படுகாயமடைந்த இருவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மணல் மற்றும் பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்