அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு

ரிசர்வ் வங்கி பணம் கைமாறுவது பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்து என்று வங்கி ஊழியர் கூட்டமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.
அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு
x
ரிசர்வ் வங்கி கையிருப்பில் உபரியாக  உள்ள  ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க  ரிசர்வ் வங்கி வாரியக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், வங்கி ஊழியர் கூட்டமைப்பும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர்  வெங்கடாசலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்த நடவடிக்கையால் பொருளாதார நிலைத்தன்மைக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்று  எச்சரித்துள்ளார். முற்றிலும் தன்னாட்சி கொண்ட ரிசர்வ் வங்கியை, நிதியமைச்சகத்தின் கிளையாக மாற்றக்கூடாது என்றும் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், அதை சீர்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பதிலாக, சீர்குலைக்கும் நடவடிக்கைகள் அரசு எடுத்து வருவதாகவும் வெங்கடாசலம் குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்