புதுச்சேரி பட்ஜெட்டில் குப்பை வரி குறைப்பது தொடர்பான அறிவிப்பு - பேரவைக்கு குப்பைக் கூடைகளுடன் வந்த பா.ஜ.க. உறுப்பினர்கள்

புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று முதலமைச்சர் நாராயணசாமி 2019-2020 ஆண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார்.
புதுச்சேரி பட்ஜெட்டில் குப்பை வரி குறைப்பது தொடர்பான அறிவிப்பு - பேரவைக்கு குப்பைக் கூடைகளுடன் வந்த பா.ஜ.க. உறுப்பினர்கள்
x
புதுச்சேரி சட்டப்பேரவையில் நேற்று முதலமைச்சர் நாராயணசாமி 2019-2020 ஆண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். புதுச்சேரியில் உயர்த்தப்பட்ட வீட்டு வரி, தொழில் வரி, குப்பை வரி ஆகியவற்றை குறைப்பதாக முதல்வர் நாராயணசாமி உறுதியளித்து இருந்த  நிலையில், இதுதொடர்பான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் எதுவும் இடம்பெறவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. நியமன உறுப்பினர்கள்  பேரவைக்குள் குப்பை தொட்டிகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பா.ஜ.க. நியமன உறுப்பினர்களுக்கு ஆதரவாக  அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் வந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்