சுஷ்மா சுவராஜ் உடல் தகனம் : பிரதமர் மோடி பங்கேற்பு - சுஷ்மா சுவராஜ் உடலுக்கு தலைவர்கள் இறுதி அஞ்சலி

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் பூத உடல், டெல்லியில் உள்ள லோதி இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.
x
புதுடெல்லியில் நேற்று காலமான சுஷ்மா ஸ்வராஜின் உடல்,  பாஜக தலைமையகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் பிற்பகலில் சுஷ்மா சுவராஜின் இறுதி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக லோதி எஸ்டேட் இடுகாட்டை அடைந்தது. அங்கு நடைபெற்ற இறுதிச்சடங்கில், பிரதமர் நரேந்திரமோடி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முழு அரசு மரியாதையுடன் சுஷ்மா சுவராஜ் உடல் தகனம் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்