பொருளாதார வளர்ச்சி கணிப்பை ரிசர்வ் வங்கி குறைத்தது : 7 % வளர்ச்சி எதிர்பார்ப்பு 6.9 சதவீதமாக மாற்றியமைப்பு

நடப்பு நிதியாண்டுக்கான, இந்திய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை 7 சதவீதத்தில் இருந்து 6 புள்ளி 9 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி கணிப்பை ரிசர்வ் வங்கி குறைத்தது : 7 % வளர்ச்சி எதிர்பார்ப்பு 6.9 சதவீதமாக மாற்றியமைப்பு
x
ரிசர்வ் வங்கியின் மூன்றாவது நிதிக்கொள்கை கூட்டம் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், இந்தியாவுக்கான ஜிடிபி வளர்ச்சி கணிப்பினை 6 புள்ளி 9 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பருவமழை குறைவு, பேரியல் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக வளர்ச்சி கணிப்பு மாற்றியமைக்கப்படுவதாக சக்திகாந்த தாஸ் கூறினார். வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தினை 5 புள்ளி 75 சதவீதத்தில் இருந்து  35 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5 புள்ளி 40 சதவீதமாக்கப்பட்டுள்ளது. ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 5 புள்ளி 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நான்காவது முறையாக ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டுள்ளதுடன், 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் மிகக் குறைந்த ரெப்போ வட்டி விகிதமாக  உள்ளது. சர்வதேச பொருளாதார மந்த நிலை காரணமாக, உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மந்த நிலையை சந்தித்து வருகின்றன என்றும் சக்திகாந்ததாஸ் கூறினார். நெப்ஃட் பரிவர்த்தனைகளுக்கான நேர கட்டுப்பாடு நீக்கப்பட்டு, அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் நெப்ஃட் பணப் பரிமாற்ற சேவைகள் அளிக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரெப்போ வட்டிக் குறைப்பு நடவடிக்கைகள் மூலம், வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்கும் கடன்கள் மீதான வட்டியை குறைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்