மறைந்த சுஷ்மா சுவராஜ் 42 ஆண்டுக்கால நண்பர் - குலாம் நபி ஆசாத்

சுஷ்மா சுவராஜ் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டு அவர் பிரிந்து செல்வார் என கற்பனை செய்து கூட பார்க்கவில்லை என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
மறைந்த சுஷ்மா சுவராஜ் 42 ஆண்டுக்கால நண்பர் - குலாம் நபி ஆசாத்
x
சுஷ்மா சுவராஜ் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும், இவ்வளவு சீக்கிரத்தில் நம்மை விட்டு அவர் பிரிந்து செல்வார் என கற்பனை செய்து கூட பார்க்கவில்லை என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் சுஷ்மாவை தெரியும் என்றும், தாம் அப்போது இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்ததாகவும் தெரிவித்த குலாம் நபி ஆசாத், 42 ஆண்டுகளாக நாங்கள் ஓரவரை ஒருவர் அறிந்து கொண்டவர்கள் என்றும், ஒருமுறை கூட நாங்கள் பெயர் சொல்லி அழைத்தது கிடையாது என்றும் ஆசாத் தெரிவித்தார். தாம் அவரை பேகன்ஜி என்றும், சுஷ்மா தம்மை பாய் என்றும் அழைப்பார் எனவும் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்