ஆக.10ம் தேதி கூடுகிறது, காங். செயற்குழு - புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு

வருகிற 10ஆம் தேதி நடைபெறும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், புதிய தலைவர் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆக.10ம் தேதி கூடுகிறது, காங். செயற்குழு - புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு
x
நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, ராகுல்காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது. தற்போது, நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால், அது முடிந்த பிறகு, காங்கிரஸ் செயற்குழு கூடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வருகிற 10ஆம் தேதி செயற்குழு கூட உள்ளதாக காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதுஎன்றும், அல்லது தற்காலிக தலைவர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்