காங்கிரசில் இருந்து அல்பேஷ் தாக்கூர் ராஜினாமா

குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளருமான அல்பேஷ் தாக்கூர், அக்கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரசில் இருந்து அல்பேஷ் தாக்கூர் ராஜினாமா
x
கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவரால், காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 43 தொகுதிகளில் வெற்றி கிடைத்ததாக கூறப்படுகிறது.இதனைத் தொடர்ந்து கட்சியின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்ட அவருக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என அதிருப்தியடைந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக அல்பேஷ் தாக்கூர் தெரிவித்துள்ளார். தனது சமூகத்தை சார்ந்த இளைஞர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற காங்கிரஸ் தவறியதால், தாக்கூர் சேனா அமைப்பின் உத்தரவை ஏற்று, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.பா.ஜ.க.வில் இணையப் போவதில்லை எனவும் அல்பேஷ் தாக்கூர் தெரிவித்துள்ளார்.இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்க உள்ள நிலையில் அல்பேஷ் தாக்கூரின் முடிவு, காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்