காங். கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்கள் நீக்கம் - பேஸ்புக் நிறுவனம் அதிரடி

காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு தொடர்புடைய 687 பக்கங்களை நீக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
காங். கட்சிக்கு தொடர்புடைய 687 பக்கங்கள் நீக்கம் - பேஸ்புக் நிறுவனம் அதிரடி
x
நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில், சமூக வலைதளங்களும் தேர்தல் பிரசாரங்களில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. அந்த வகையில் பிரபல சமூக வலைதள பக்கமான பேஸ்புக்கிலும் அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.இந்நிலையில்,பேஸ்புக்கில் தவறான தகவல்களை பரப்பியதாக காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு சொந்தமான 687 பக்கங்களை பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.மேலும் பாகிஸ்தான் ராணுவத்துடன் தொடர்புடைய 103 பக்கங்களும் நீக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்