காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை - நாளை வெளியிடுகிறார் ராகுல் காந்தி

நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை - நாளை வெளியிடுகிறார் ராகுல் காந்தி
x
நாடாளுமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்படுகிறது. அதனை, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் வெளியிடுகின்றனர்.குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ராகுல் காந்தி ஏற்கனவே அறிவித்திருந்தார்.அதேபோல் விவசாய கடன் ரத்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்கும், 3 சதவீதத்தை சுகாதாரத்துக்கும் ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Next Story

மேலும் செய்திகள்