"நம்ம ஊர் சிங்காரி" பாடல் மறு உருவாக்கம் - நடிகர் விஜய் ஆண்டனி வெளியீடு

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் நம்ம ஊரு சிங்காரி மறு உருவாக்க பாடல் இணையதளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
நம்ம ஊர் சிங்காரி பாடல் மறு உருவாக்கம் - நடிகர் விஜய் ஆண்டனி வெளியீடு
x
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் நம்ம ஊரு சிங்காரி மறு உருவாக்க பாடல் இணையதளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் 1979-ஆம் ஆண்டு வெளியான "நம்ம ஊர் சிங்காரி பாடலை" இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி  மறு உருவாக்கம் செய்து வெளியிட்டு உள்ளார். சமூக வலைதளத்தில் பாடல் வெளியாகிய நிலையில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.  

த்ரிஷாவின் "ராங்கி" படத்தின் பனித்துளி பாடலை வெளியிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகை திரிஷா நடிக்கும் ராங்கி படத்தின் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டு உள்ளார். எங்கேயும் எப்போதும் பட இயக்குனரின் அடுத்த படமான "ராங்கி"யில் நடிகை திரிஷா நடித்து வருகிறார். இந்நிலையில் ராங்கி படத்தின் பனித்துளி பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.     

இணையதளத்தில் கசிந்த "கொம்பு" பட காட்சிகள் - நடவடிக்கை எடுக்கக்கோரி படக்குழுவினர் புகார்

கொம்பு திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பட குழுவினர் புகார் அளித்து உள்ளனர். நகைச்சுவை நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கொம்பு திரைப்பட காட்சிகளை சிலர் சட்ட விரோதமாக திருடி இணையதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையரிடம் பட குழுவினர் புகார் அளித்து உள்ளனர்.  

நடிகர் சந்தானத்தின் "டிக்கிலோனா" படம் : "சைக்கிள் வீல்" பாடல் வெளியீடு

நடிகர் சந்தானத்தின் டிக்கிலோனா பட பாடல் சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. நடிகர் சந்தானம் டிக்கிலோனா படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் தயாரான "சைக்கிள் வீல்" என்ற பாடல் வெளியிடப்பட்டு உள்ளது.  

மாதவனின் "மாறா"- ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

மாதவன் நடிக்கும் மாறா திரைப்படம் ஜனவரி எட்டாம் தேதி ஓடிடியில் வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மலையாள மொழியில் பெரும் வரவேற்பை பெற்ற சார்லி திரைப்படத்தின் தமிழ்  ரீமேக், மாறா என்ற பெயரில் உருவாகியுள்ளது.  இந்த திரைப்படம் ஓடிடியில் டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜனவரி எட்டாம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்