திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். பக்தர்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்தனர்... இந்நிலையில், கோவில் ஊழியர்கள் மற்றும் இடைத்தரர்கள் சிலர் ஜிபே மற்றும் நேரடியாக பணம் பெற்றுக் கொண்டு பக்தர்களை குறுக்கு வழியில் சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் இதில் ஒரு பெண் பக்தருக்கு தலையில் காயம் ஏற்பட்டது...