தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு நிச்சயம் இருக்காது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உறுதிபட தெரிவித்துள்ளார்.. அரியலூரில் 9.28 கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேருந்து கட்டண உயர்வுக்கான சூழல் ஏற்பட்ட போதும், கட்டண உயர்வை மக்கள் மீது திணிக்காமல் அரசே ஏற்றுக் கொண்டிருப்பதாக கூறினார்.