Thanjavur | Pmk | NIA | பாமக பிரமுகர் கொலை வழக்கு - 5 ஆண்டுகளுக்கு பின் அதிரடி கைது

Update: 2025-12-17 03:50 GMT

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம், கடந்த 2019ம் ஆண்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 18 பேருக்கு தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை தெரிவித்தது. மேலும், முகமது அலி ஜின்னா, அப்துல் மஜீத், புர்ஹானுதீன், சாகுல் ஹமீது, நபீல் ஹாசன் ஆகியோர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்களை பற்றி தகவல் தெரிவித்தால், தலா 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என NIA அறிவித்திருந்தது. இந்நிலையில், கொடைக்கானலில் பதுங்கி இருந்த முகமது அலி ஜின்னா என்பவரை NIA அதிகாரிகள் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்