Today Headlines | காலை 11மணி தலைப்புச் செய்திகள் (17.11.2025)| 11 AM Headlines| ThanthiTV

Update: 2025-12-17 05:46 GMT
  • ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது... ஒரு சவரன் தங்கம் மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கி 99 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது...
  • திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரத்தில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள்... மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் 4வது நாளாக இன்றும் விசாரணைக்கு வருகிறது...
  • SIR மூலம் மேற்கு வங்கம் உள்ளிட்ட 3 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்... புதுச்சேரியில் மட்டும் 1 லட்சத்து 3 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
  • சபரிமலையில் இதுவரை 27 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்... மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் வருகை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது...
  • 25 பேரின் உயிரைப் பறித்த கோவா தீ விபத்தில் கைதான நைட் கிளப் உரிமையாளர்களான லூத்ரா சகோதரர்களுக்கு 2 நாள் போலீஸ் காவல்... இருவரையும் விசாரணைக்காக போலீசார் கோவா அழைத்துச் சென்றனர்....
Tags:    

மேலும் செய்திகள்