Milk Products | பால் பொருட்களில் கலப்படமா? - புகாரை தொடர்ந்து அதிரடி நடவடிக்கை
பால், பனீர் உள்ளிட்ட பால் பொருட்களில் கலப்படம் நடைபெறுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து சிறப்பு அதிரடி நடவடிக்கையை தொடங்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தீவிர ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் லைசன்ஸ் பெற்ற மற்றும் பெறாத பால் நிறுவனங்கள் கண்காணிக்கப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.