தமிழ் சினிமாவில் பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்ட பாடல் மலையாள சினிமாவில் மெகாஹிட் ஆகி, தனக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்ததாக இசையமைப்பாளர் வித்யாசாகர் தெரிவித்துள்ளார். சுரேஷ்கோபி, ஜெயராம் மற்றும் மோகன்லாலின் சிறப்பு தோற்றத்தில் வெளியான "சம்மர் இன் பெத்லகம்" திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தில் இடம்பெற்ற "எத்ரையோ ஜென்மமாகி" பாடல், இன்று வரை ரசிகர்களின் பேவரட் பாடலாக உள்ளது. இந்நிலையில் இப்பாடல் முதலில் தமிழ் படம் ஒன்றுக்காக இசையமைத்தது என வித்யாசாகர் மனம் திறந்துள்ளார்.