Chennai Corporation | சொன்னபடியே இறங்கிய சென்னை கார்ப்பரேஷன்.. 2 நாளில் மட்டுமே ரூ.46 ஆயிரம்
சென்னை திரு.வி.க.நகரில் கடந்த இரு நாட்களில், 30 வளர்ப்பு நாய்களை ஆய்வு செய்த நிலையில், உரிமம் பெறாத 7 நாய்களின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த இரு நாட்களில் மட்டும் 46 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் அபராதம் விதிக்கப்பட்டவர்கள் வளர்ப்பு நாய்களுக்கு உடனடியாக லைசென்ஸ் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.