Chennai | Lawyer | சென்னையில் திடீர் பரபரப்பு.. வழக்கறிஞர் கைது

Update: 2025-12-17 02:41 GMT

சென்னை அமைந்தகரையில் மதுபோதையில் டீ கடைக்காரரிடம் ஜிபே மூலம் பணம் அனுப்பியதாக பொய் சொல்லி, பணம் கேட்டு மிரட்டிய வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். மதுபோதையில் வழக்கறிஞர் ராகவேந்திரன் என்பவர் டீக்கடையில் இருந்த மரியா ஜெகன் என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவ்வழியே சென்ற ரோந்து போலீஸார் ராகவேந்திரனை பிடித்து விசாரித்த போது, கல்லை வீசி போலீஸ் வகனத்தின் கண்ணாடியை உடைத்துள்ளார். இதையடுத்து போலீஸார் ராகவேந்திரனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்