Tiruchendur | திருச்செந்தூர் கோயில் மகா கும்பாபிஷேகம் - பிரமாண்ட ஏற்பாடு

Update: 2025-06-22 04:29 GMT

திருச்செந்தூர் கோயில் மகா கும்பாபிஷேகம் - பிரமாண்ட ஏற்பாடு

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. 12 வருடங்களுக்கு பிறகு நடைபெற உள்ளதால் 10 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடமுழுக்கு விழாவையொட்டி கோயில் மேற்கு கோபுரம் அருகே 8 ஆயிரம் சதுர அடியில் 76 குண்டங்களுடன் பிரமாண்டமாக யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தற்போது யாகசாலையில் வர்ணம் பூசுதல், சித்திரங்கள் வரையும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் குண்டம் அமைக்கும் பணியும், குண்டத்திற்கு வர்ணம் பூசும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்