கன்னியாகுமரியில் போலீஸாருக்கு சவால் விட்டு வீடியோ வெளியிட்ட இளைஞர், தற்போது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி உள்ளது. சமீபத்தில் எஸ்பி அலுவலகம் முன் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய உள்ளோம், முடிந்தால் தடுத்து பாருங்கள் என இளைஞர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பரவி வந்தது. இந்நிலையில் தற்போது அந்த இளைஞர் போலீஸார் தன்னை அழைத்து அறிவுரை வழங்கியதாகவும், தான் தவறை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.