ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, பைக்கில் சென்று கொண்டிருந்த ஆசிரியையிடம் 6 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வெங்கடேசபுரத்தை சேர்ந்த சாம் மார்ஷல் என்பவரின் மனைவியான வைலட் என்பவரிடம் இருந்து நகையை பறித்து சென்ற நிலையில், அப்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதில் தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.