திருத்தணி ரயில் நிலையத்தில் மற்றொரு தாக்குதல் - அதிர்ச்சி சம்பவம்..

Update: 2025-12-31 08:06 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையத்தில், புடவை வியாபாரியை 2 இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழைய புடவை வியாபாரம் செய்யும் ஜமால் என்பவர் திருத்தணி ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது, அங்கு வந்த 2 இளைஞர்கள் அவரை சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், காயமடைந்த ஜமாலை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சில தினங்களுக்கு முன்னர், வட மாநில இளைஞரை சிறுவர்கள் கொடூரமாக தாக்கிய அதே பகுதியில் மற்றொரு தாக்குதல் சம்பவம் நடந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்