திடீரென காணாமல் போன சிறுவன் - கிணற்றில் சடலமாக கிடந்ததால் அதிர்ச்சி..

Update: 2025-12-31 06:58 GMT

வேலூர் மாவட்டம், தொரப்பாடியை சேர்ந்த கிஷோர் என்ற 14 வயது சிறுவன், கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 8ம் வகுப்பு பயிலும் கிஷோர் திடீரென காணாமல் போக, சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணத்திற்கான காரணத்தை, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்