நடுரோட்டில் பள்ளி காவலாளியை சரமாரியாக வெட்டி கொலை செய்த கும்பல்... திருப்பத்தூரில் அதிர்ச்சி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி இக்பால் சாலையில் உள்ள தனியார் நர்ஸரி, பிரைமரி பள்ளியின் காவலாளி மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர், முஸ்லீம்பூர் பகுதியை சேர்ந்த இஃர்பான். இவர் சைக்கிளில் பள்ளிக்கு வந்தபோது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். பிரேத பரிசோதனைக்காக, இவரது உடல் அனுப்பப்பட்ட நிலையில், வாணியம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். இதனிடையே, தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.