2 மணி நேரம் விடாமல் கொட்டிய கனமழை.. குளுகுளுவென மாறிய தி.மலை

Update: 2025-08-04 03:28 GMT

2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை - மக்கள் மகிழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்துள்ள நிலையில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் இரவில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக மாநராட்சி பகுதியில் வெள்ள நீர் தேங்கி, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். 

Tags:    

மேலும் செய்திகள்