தாயை இழந்த பச்சிளம் குழந்தை.. கண்ணீருடன் தாலாட்டு பாடும் பாட்டி-மனதை நொறுக்கும் வீடியோ

Update: 2025-12-31 05:39 GMT

தாயை இழந்த பச்சிளம் குழந்தை.. கண்ணீருடன் தாலாட்டு பாடும் பாட்டி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பச்சிளம் குழந்தையின் தாய் பிரசவத்தின் போது உயிரிழந்த நிலையில், அந்தக் குழந்தையை அவரது

பாட்டி கண்ணீருடன் தாலாட்டு பாடி தூங்க வைக்கும் காட்சி மனதை உருக்கும் வகையில் உள்ளது. கோபாலபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி - சுதா தம்பதியருக்கு பிறந்த ஆண் குழந்தை, தாயை இழந்து தவித்து வருகிறது.

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் தனது மனைவி உயிரிழந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரை மனைவியின் உடலைப் பெறமாட்டேன் என்றும் கணவர் கருப்பசாமி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்