போதையில் கிணற்றில் விழுந்த மாற்றுத்திறனாளி... மீட்கப்படும் பரபரப்பு காட்சி
மது போதையில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த மாற்றுத்திறனாளியை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். வேலூர் மாவட்டம் நலங்காநல்லூர் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இந்நிலையில், அந்த பகுதி வழியாக மது அருந்துவிட்டு போதையில் வந்த சேம்பள்ளி சானாங்குட்டை பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளங்கோ என்பவர் கிருஷ்ணனின் 50 அடி ஆழ விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், கிணற்றில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளங்கோவைக் உயிருடன் பத்திரமாக மீட்டனர்.