அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின்? - தலைமைச்செயலகத்தில் தயாராகும் 2 அறைகள்

அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு இடம் என தகவல் வெளியான நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் 2 அறைகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.

Update: 2022-12-09 11:04 GMT

தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. சில மூத்த அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தின் இரண்டு அறைகளை பொதுப்பணி துறை ஊழியர்கள் முழு வீச்சில் தயார் செய்து வருகின்றனர். ளபத்தாவது எண் நுழைவாயிலில் தயாராகும் அறை, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனுக்கு ஒதுக்கப்படலாம் எனக் தெரிகிறது. 2-வது தளத்தில் ஏ.கே.எஸ்.விஜயன் பயன்படுத்தி வந்த அறை, அமைச்சரவையில் இலாகா வழங்கப்பட்டால் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்