குஜராத் வன்முறை 2002.. ஆதாரங்கள் புனையப்பட்டதா?அப்போதைய முதல்வர் மோடி..என்ன நடந்தது? | Gujarat 2002

குஜராத் கலவர வழக்கில், ஆதாரங்கள் புனையப்பட்டதாக முன்னாள் டிஜிபி மற்றும் சமூக செயற்பாட்டாளரை அகமதாபாத் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-26 03:00 GMT

குஜராத் கலவர வழக்கில், ஆதாரங்கள் புனையப்பட்டதாக முன்னாள் டிஜிபி மற்றும் சமூக செயற்பாட்டாளரை அகமதாபாத் போலீசார் கைது செய்தனர். 2002ஆம் ஆண்டு குஜராத் கலவர வழக்கில் அப்போதைய முதல்வர் மோடிக்கு தொடர்பில்லை என சிறப்பு புலனாய்வுக்குழு சான்றளித்த‌தை உச்ச நீதிமன்றம் நேற்று முன் தினம் உறுதி செய்த‌து. மேலும், ஜாகியா ஜாஃப்ரியாவின் மனுவையும் தள்ளுபடி செய்த‌து. இந்நிலையில், ஆதாரங்கள் புனையப்பட்டதாக, முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமாரையும், மனுதார‌ர் ஜாகியா ஜாஃப்ரியாவுக்கு ஆதரவளித்த சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செடல்வாட் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது குற்றவியல் சதி, மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்