கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை - எச்சரிக்கை விடுத்த WHO தலைவர்

கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானெம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2021-10-25 09:25 GMT
கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானெம் எச்சரிக்கை விடுத்துள்ளார். பெர்லினில் நடைபெற்ற உலக சுகாதார உச்சி மாநாட்டில், ஞாயிறு அன்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர்  டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசெஸ் உரையாற்றினார். உலக அளவில் கொரோனா தொற்று பரவல் இன்னும் முடிவடையவில்லை என்றும், அதை முடிவுக்கு கொண்டு வர, உலக நாடுகளிடம் உள்ள பொது மருத்துவத் துறைகளை சிறப்பாக பயன்படுத்த வேண்டும் என்றார்.ஆனால் அவற்றை நாம் இன்னும் ஒழுங்காக பயன்படுத்தவில்லை என்றும், வாரத்திற்கு 50,000 கொரோனா மரணங்கள் ஏற்படும் நிலையில், தொற்று  இன்னும் முடிவடையவில்லை என்றார். ஜி20 நாடுகளில் 40 சதவீதத்தினருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நாடுகள் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை அளிக்கும் கோவேக்ஸ் திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். இந்த உச்சி மாநாட்டில் உரையாற்றிய ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டொனியோ குட்டெரெஸ், உலக அளவில் கொரோனா தடுப்பூசிகளை விநியோகிக்க, ஜி20 நாடுகள் 60 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றார். 





Tags:    

மேலும் செய்திகள்