மனிதனுக்குப் பொருத்தப்பட்ட பன்றியின் கிட்னி - அமெரிக்க மருத்துவர்கள் புதிய சாதனை

பன்றியின் சிறு நீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.

Update: 2021-10-21 07:59 GMT
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள என்.ஒய்.யு லங்கோன் மருத்துவமனையில்,  மூளைச் சாவடைந்த நபர் ஒருவரின் சிறு நீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்த நிலையில், அவருடைய குடும்பத்தினரின் அனுமதியுடன் மருத்துவர்கள் பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி சோதனை செய்தனர். பன்றியின் சிறுநீரகம் உடலுக்கு வெளியே, அவரது ரத்தக் குழாய்களுடன் இணைக்கப்பட்டு, 3 நாட்கள் வரை பராமரிக்கப்பட்ட நிலையில், சிறுநீரகம் மூளைச் சாவடைந்த நபரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் நிராகரிக்கப்படாமல் இயங்கியுள்ளது. முன்னர் இருந்த சிறுநீரகத்தின் செயல்பாடு மிக மோசமானதாகவும், கிரியேட்டின் அளவு அசாதாரணமாகவும் இருந்ததாக குறிப்பிடும் மருத்துவர்கள், அறுவை சிகிச்சைக்குப் பிறகு கிரியேட்டின் அளவு இயல்பு நிலையை அடைந்ததாகத் தெரிவித்தனர். இதன் மூலம் இனங்களுக்கு இடையேயான இடைவெளி குறையும் என்று மருத்துவர்கள் கருதுவது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்