"ஆப்கானியர்களுக்கு துணை நிற்க வேண்டும்" - சர்வதேச திரைத் துறைக்கு வேண்டுகோள்

வெனிஸ் திரைப்பட விழாவின் போது, "தங்களுக்கு துணை நிற்கக் கோரி", ஆப்கான் திரைப்பட தயாரிப்பாளர்கள், அனைத்து நாடுகளைச் சேர்ந்த திரைத் துறையினருக்கும் வேண்டுகோள் விடுத்தனர்.

Update: 2021-09-05 04:13 GMT
வெனிஸ் திரைப்பட விழாவின் போது,  "தங்களுக்கு துணை நிற்கக் கோரி", ஆப்கான் திரைப்பட தயாரிப்பாளர்கள், அனைத்து நாடுகளைச் சேர்ந்த திரைத் துறையினருக்கும் வேண்டுகோள் விடுத்தனர். இது குறித்து பேசிய ஆப்கான் பெண் திரைப்பட இயக்குநர் சாரா கரிமி, தலிபான்கள் இப்போதும் முன்பிருந்ததைப் போலவே மிகவும் கொடூரமாக இருப்பதாகவும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியினால் தலிபான்கள் மிகவும் முன்னேறிவிட்டதாகவும் எச்சரித்தார். மேலும், சினிமாத் துறையையும் கூட அவர்கள் தங்களுக்கு ஏற்றார்போல் பயன்படுத்திக் கொள்ளக்கூடும் என்றும் அவர் கவலை தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்