மியாமி அடுக்குமாடி குடியிருப்பு விபத்து; இடிபாடுகளில் இருந்து பூனை மீட்பு - உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்

அமெரிக்காவின் மியாமி நகரில் ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 79-ஆக அதிகரித்து உள்ளது.

Update: 2021-07-10 09:51 GMT
அமெரிக்காவின் மியாமி நகரில் ஏற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 79-ஆக அதிகரித்து உள்ளது. கட்டட இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கி இருக்கலாம் எனக் கருதப்படும் நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனிடையே, கட்டட இடிபாடுகளில் இருந்து பின்க்ஸ் என்ற வளர்ப்பு பூனை ஒன்று, உயிருடன் மீட்கப்பட்டு உள்ளது. மீட்கப்பட்ட பூனை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக மியாமி மேயர் கூறி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்