ஆற்றங்கரையோரம் மணல் சிற்ப ஓவியம் - அசத்தும் க்ரொயேசிய மணல் சிற்பக் கலைஞர்

குரோசிய மணல் சிற்ப ஓவியர் நிகோலா, நெரெட்வா ஆற்றங்கரையோரம் தனது மணல் ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார்.

Update: 2021-07-09 08:25 GMT
குரோசிய மணல் சிற்ப ஓவியர் நிகோலா, நெரெட்வா ஆற்றங்கரையோரம் தனது மணல் ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார். வருடந்தோறும் நடக்கும் இந்த சென் ஒபுசென் கலை விழாவில் பங்கேற்கும் நிகோலா, மணல் ஓவியங்களை வரைந்து தன் திறமையை வெளிப்படுத்துவார். இது குறித்து அவர் கூறுகையில், படைப்புத் திறனுக்கான வாய்ப்புகள் எப்போதும் முடிவதில்லை என்றும், இந்த மணல் ஓவியங்களை ஆற்று நீர் விரைவிலேயே அழித்து விடும் என்றாலும், அடுத்த நாள் தன் கற்பனைத் திறனைக் காட்ட புதியதொரு தளம் காத்துக் கொண்டிருக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். மேலும், மணல் ஓவியங்களை உருவாக்கத் தனக்கு உத்வேகத்தைத் தந்தவை புத்த, கிறிஸ்தவ, இந்து மதங்கள் தான் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்