கடலுக்கு அடியில் அழகிய உலகம் - எச்சரிக்கை விடுக்கும் யுனெஸ்கோ

ஆஸ்திரேலிய பவள பாறைகள் அழியும் நிலையி​ல் உள்ளதாக ஐ.நா.வின் யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Update: 2021-06-24 13:06 GMT
ஆனால் இதை ஆஸ்திரேலிய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.உலகின் மிகப் பெரிய பவளப்பாறை திட்டு, ஆஸ்திரேலியாவின் வட கிழக்கு கடலோரப் பகுதியில், கடலுக்கு அடியில் அமைந்துள்ளது.உலகப் புகழ் பெற்ற இந்த மிக அழகிய பவளப்பாறை திட்டை காண ஆண்டுக்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் உலகெங்கும் இருந்து வருகின்றனர்.புவி வெப்பமயமாதல் காரணமாக கடல்களில் ஏற்படும் வெப்ப அலைகளினால், இந்த பெரும் பவளப்பாறை திட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால், இதை அழியும் நிலையில் உள்ள புராதான சின்னங்கள் பட்டியலில் சேர்க்க ஐ.நாவின் யுனேஸ்கோ அமைப்பின் குழு பரிந்துரை செய்துள்ளது.இந்த பரிந்துரையை கடுமையாக விமர்சனம் செய்துள்ள ஆஸ்த்ரேலியாவின் சுற்றுச்சூழல் அமைச்சர் சூசன் லே, இது இயல்பான நடைமுறைக்கு நேர் எதிரான செயல் என்று சாடியுள்ளார். அழியும் நிலையில் உள்ள புராதன சின்னங்கள் பட்டியில் இது சேர்க்கப்பட்டால், பிறகு இதைக் காண வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து, ஆஸ்த்ரேலியாவின் வருவாய் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஆஸ்த்ரேலியர்களுக்கு உள்ளதாக கருதப்படுகிறது.வருவாயை கருத்தில் கொள்ளும் அரசு, இயற்கைகயை காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கடல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்