சாகச நாயகன் ஸ்பைடர்மேன் - போப் பிரான்ஸிஸ்க்கு பரிசளித்த ஸ்பைடர்மேன்

வாடிகன் நகரில் போப் நடத்திய கூட்டத்தில், ஸ்பைடர் மேன் உடையில் ஒருவர் கலந்து கொண்டது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

Update: 2021-06-24 05:56 GMT
வாடிகன் நகரில் போப் நடத்திய கூட்டத்தில், ஸ்பைடர் மேன் உடையில் ஒருவர் கலந்து கொண்டது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

ஹாலிவுடடில், ஸ்பைடர்மேன் புரியும் சாகசங்களை பார்த்து மகிழ்ந்தவர்கள் உலகெங்கும் பல கோடி பேர் உள்ளனர்.

பீட்டர் பார்க்கர் என்ற இளைஞரை மரபணு மாற்றம் பெற்ற சிலந்தி ஒன்று கடித்ததால், அவருக்கு சிலந்திகளை போல சுவர்களில் ஏறும் திறன் கிடைத்து, முகமூடி அணிந்து பல்வேறு சாகசங்களில் ஈடுபடுவதாக உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் தான் ஸ்பைடர்மேன்.

ஸ்பைடர் மேன் உடையை அணிய வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் ஆசையாக உள்ளது. 

போப் பிரான்ஸிஸ், வாடிகன் நகரில், சேன் டமசோ முற்றத்தில் வாரம் ஒரு முறை பொது மக்களிடம் உரையாடுவது வழக்கம்.

புதன் அன்று நடைபெற்ற வாராந்திர கூட்டத்தில், ஸ்பைடர் மேன் வேடம் அணிந்த நபர் ஒருவர், பார்வையாளர்கள் அரங்கில், அமைதியாக அமர்ந்து, போப் பிரான்சிஸின் உரையை கேட்டார். 

கொரோனா தொற்றுதலினால் அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தால், ஸ்பைடர் மேன் வேடத்தில் வந்தவர் யார் என்று காவலர்கள் உள்ளிட்ட யாருக்கும் தெரியவில்லை.

கூட்டம் நிறைவடைந்த பிறகு போப் உடன் பேசிய அந்த நபர், ஸ்பைடர் மேன் முககவசத்தை போப் பிரான்சிஸ்க்கு பரிசாக வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்