தீ விபத்தில் சீர்குலைந்த சரக்கு கப்பல் - கப்பல் பின்பகுதி கடலில் மூழ்கியது

இலங்கை கொழும்பு துறைமுகம் அருகே தீ விபத்து ஏற்பட்ட சரக்கு கப்பல் நீரில் மூழ்க தொடங்கியுள்ளதால் ரசாயன பொருட்கள் கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-06-03 06:23 GMT
இலங்கை கொழும்பு துறைமுகம் அருகே தீ விபத்து ஏற்பட்ட சரக்கு கப்பல் நீரில் மூழ்க தொடங்கியுள்ளதால் ரசாயன பொருட்கள் கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. கொழும்பு துறைமுகத்தில் இருந்து 22 மைல் தொலைவில் நிறுத்தப்பட்டு உள்ள இந்த கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்து செல்ல அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டார். இந்நிலையில் கப்பலின் 50 சதவீதம் பாகங்கள் கடலில் மூழ்கியுள்ளதால் கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் கப்பலில் உள்ள நைட்ரிக் ஆசிட் மற்றும் எரிபொருட்கள் கடலில் கலந்து சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்