சரக்கு வாகனம்-பேருந்து மோதி விபத்து; 11 பேர் பலி-பலர் படுகாயம்

சீனாவில் சரக்கு வாகனமும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2021-04-04 20:39 GMT
சீனாவில் சரக்கு வாகனமும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். ஜியாங்ஷு மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம், எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து, எதிரில் வந்த பேருந்தில் மோதியது. இந்த விபத்தில், 11 பேர் பலியான நிலையில், காயம் அடைந்தவர்களை மீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்