சிறந்த கார்பன் உறிஞ்சும் தொழில்நுட்பம் - டெஸ்லா நிறுவனர் மஸ்க் அறிவிப்பு

புவி வெப்பமயமாதலுக்கு காரணமான கார்பனை உறிஞ்ச முடியுமா...? எலான் மஸ்க் அறிவிப்பும்...நடைமுறையும் குறித்து விரிவாக பார்க்கலாம்...

Update: 2021-01-25 06:48 GMT
புவி வெப்பமயமாதலுக்கு காரணமான கார்பனை உறிஞ்ச முடியுமா...? எலான் மஸ்க் அறிவிப்பும்... நடைமுறையும் குறித்து விரிவாக பார்க்கலாம்...தொழில்துறை வளர்ச்சியடைய தொடங்கிய பின்னர் பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற புதைபடிம எரிபொருள்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது இதனால் வளிமண்டலத்திற்கு செல்லும் கார்பன் டை ஆக்ஸைடு அதிகரித்து வெப்பமயமாதல் என்ற பிரச்சினை உருவெடுத்துள்ளது.இதனை தடுக்க உலக நாடுகள் நடவடிக்கையில் இறங்கினாலும் இதுபோதுமானது கிடையாது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.இயற்கையின் கட்டமைப்பில் மரங்களே கார்பனை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகிறது.ஆனால் உலக அளவில் வனங்கள் அழிப்பால் வாகனங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் சுரங்கங்களில் இருந்து வெளியேறும் கார்பனை குறைப்பதில் இயற்கை தவிக்கிறது.இப்பிரச்சினைக்கு தீர்வு காண தொழில்நுட்பத்தை நோக்கி மனிதர்களின் பார்வை திரும்பியுள்ளது.இந்நிலையில் தான் சிறந்த கார்பன் உறிஞ்சும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவருக்கு 730 கோடி பரிசு தொகை வழங்கப்படும் என உலக பணக்காரரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மாஸ்க் அறிவித்து உள்ளார்.கார்பனை உறிஞ்சும் அவருடைய திட்டம், அவருடைய  வணிகத்துடனும் ஒத்துப்போகிறது.உலகின் பிரபல மின்சார கார் நிறுவனமான டெஸ்லா, இவருடையதே...பெரிதாக சிந்திக்க பயப்படக்கூடாது என ஸ்திரமாக கூறும் மஸ்க், சுற்றுசூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே டெஸ்லா நிறுவனத்தை தொடங்கி வெற்றியையும் தனதாக்கியுள்ளார்.இயற்கையின் கொடையையும் பயன்படுத்த தவறக்கூடாது எனக் கூறும் மஸ்க்,  சூரிய சக்தி துறையிலும் துடிப்பாக செயல்படுகிறார்.அவருடைய சோலார் சிட்டி நிறுவனம் சூரிய ஒளியில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையிலான சூரிய கூரை ஓடுகள் மற்றும் அதனை சேமிக்க பிரத்யேக பேட்டரிகளையும் தயாரித்துள்ளது.இதன் வாயிலாக கார்களுக்கு சார்ஜ் செய்யும் வகையிலான கட்டமைப்பிலும் அசத்துகிறது.அவருடைய ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனமும் ராக்கெட்களை மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் திரவ எரிப்பொருட்களை குறைப்பதில் முத்திரை பதிக்கிறது.கார்பனை உறிஞ்சும் தொழில்நுட்பம் ஏற்கனவே பில்கேட்ஸ் அறக்கட்டளையால் கனடாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.பெரிதாக சிந்திக்க பயப்படக்கூடாது என ஸ்திரமாக கூறும் மஸ்க், சுற்றுசூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே டெஸ்லா நிறுவனத்தை தொடங்கி வெற்றியையும் தனதாக்கியுள்ளார்.இயற்கையின் கொடையையும் பயன்படுத்த தவறக்கூடாது எனக் கூறும் மஸ்க்,  சூரிய சக்தி துறையிலும் துடிப்பாக செயல்படுகிறார்.அவருடைய சோலார் சிட்டி நிறுவனம் சூரிய ஒளியில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையிலான சூரிய கூரை ஓடுகள் மற்றும் அதனை சேமிக்க பிரத்யேக பேட்டரிகளையும் தயாரித்துள்ளது.இதன் வாயிலாக கார்களுக்கு சார்ஜ் செய்யும் வகையிலான கட்டமைப்பிலும் அசத்துகிறது.அவருடைய ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனமும் ராக்கெட்களை மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பம் மற்றும் திரவ எரிப்பொருட்களை குறைப்பதில் முத்திரை பதிக்கிறது.கார்பனை உறிஞ்சும் தொழில்நுட்பம் ஏற்கனவே பில்கேட்ஸ் அறக்கட்டளையால் கனடாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்