சீனா சென்ற உலக சுகாதார நிறுவனம் ஆய்வுகளை நடத்த திட்டம்

கொரோனா தொற்று முதன் முதலில் உருவான சீனாவின் ஊஹான் நகருக்கு, உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு சென்றடைந்தது.

Update: 2021-01-16 12:19 GMT
ஊஹான் நகருக்குச் செல்வதற்கு சீனா முதலில் அனுமதி மறுத்த நிலையில், தற்போது, அனுமதி அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து,  உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் குழு அங்கு சென்றுள்ளது. கொரோனா வைரஸின் தோற்றம் மற்றும் அதன் மூல காரணம் பற்றிய ஆய்வுகளை நடத்த அந்த குழு திட்டமிட்டுள்ளது. சீன  விஞ்ஞானிகள் இந்த விஷயத்தில் ஒத்துழைப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இதற்கிடையே, நிபுணர் மரிய வேன் கெர்கொவே கூறுகையில், ஏற்கனவே சீனாவிற்கு சென்று நேரடியாக இணைந்து பணியாற்றி இருப்பதாகவும், அங்கு கண்டறியப்படும் உண்மைகளை விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்