இந்தியாவிடம் இருந்து தடுப்பூசி வாங்குகிறது தென் ஆப்பிரிக்கா

கோவி‌ஷீல்டு தடுப்பூசியை இந்தியாவிடம் இருந்து வாங்குவதாக தென் ஆப்பிரிக்கா தெரிவித்து உள்ளது.

Update: 2021-01-08 06:57 GMT
கோவி‌ஷீல்டு தடுப்பூசியை இந்தியாவிடம் இருந்து வாங்குவதாக தென் ஆப்பிரிக்கா தெரிவித்து உள்ளது.  சீரம் நிறுவனத்திடம் இருந்து இந்த மாதம் 10 லட்சம் டோஸ்களையும், அடுத்த மாதம் 5 லட்சம் டோஸ்களையும் வாங்க உள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். புதிய உருமாறிய கொரோனா வைரசால் சிக்கி தவிக்கும் தென் ஆப்பிரிக்கா முதல்கட்டமாக  மருத்துவ பணியாளர்களுக்கு தடுப்பூசியை செலுத்த ஆர்வம் காட்டுகிறது. சீரம் நிறுவனம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஏழை மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வழங்குகிறது.
Tags:    

மேலும் செய்திகள்