"அமெரிக்க வரலாற்றின் கருப்பு நாள் - கலவரத்தில் ஈடுபட்டவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகள்" : ஜோபைடன் காட்டம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்தியதே டிரம்ப்தான் என குற்றம் சாட்டியிருக்கும் ஜோ பைடன், கலவரத்தில் ஈடுபட்டவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகள் எனக் காட்டமாக கூறியுள்ளார்.

Update: 2021-01-08 04:11 GMT
அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்க உள்ள ஜோ பைடன் வில்மிங்டனில் தனது நீதித்துறைக்கான பிரதிநிதிகளை அறிமுகம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், நாடாளுமன்றத்தில் கலவரத்தை தூண்டிவிட்டதே டிரம்தான் என குற்றம் சாட்டினார். மேலும், பேரணியாக சென்று நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை போராட்டக்காரர்கள் எனக் கூறி முடியாது, அவர்கள் உள்நாட்டு பயங்கரவாதிகள் எனவும் விமர்சனம் செய்தார். நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது, இது வரலாற்றின் கருப்பு நாள் என்ற பைடன், இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் கூறினார். மேலும், கடந்த 4 வருடங்களாக அமெரிக்க ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் சட்டத்தை அவமதிப்பு செய்த ஒரு அதிபரையே கொண்டிருந்தோம் எனக் டிரம்பை விமர்சனம் செய்த பைடன், தற்போது எல்லாவற்றையும் தான் சுத்தம் செய்துவிட்டேன் எனக் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்