"இரு நிறுவன தடுப்பூசிகளை செலுத்த வேண்டாம்" - பிரிட்டன் சுகாதாரத் துறை தகவல்

இரு தடுப்பூசிகளையும் உடலில் செலுத்த பரிந்துரை செய்யப்படவில்லை என பிரிட்டன் சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது.

Update: 2021-01-03 05:21 GMT
இரு தடுப்பூசிகளையும் உடலில் செலுத்த பரிந்துரை செய்யப்படவில்லை என பிரிட்டன் சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது. பிரிட்டனில் பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசிகளை பயன்படுத்த சுகாதார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்து உள்ளது. அதேநேரம் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட 21 நாட்களுக்குபின் மீண்டும் அதே நிறுவனத்தின் 2-வது டோஸ் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்று தெரிவித்து உள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து நோய் தடுப்பு மருந்துகள் ஆணையத்தின் தலைவர் மேரி ராம்சே கூறுகையில், மாற்று நிறுவனத்தின் தடுப்பூசியை கலந்து செலுத்துவது குறித்து எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்