ஆப்கனில் இருந்து 4 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் திரும்புகின்றனர் - அதிபர் டிரம்ப்

ஆப்கானிஸ்தானில் இருந்து 4 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் விரைவில் திரும்பப் பெறப்பட உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-11 03:24 GMT
ஆப்கானிஸ்தானில் இருந்து 4 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் விரைவில் திரும்பப் பெறப்பட உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைதி பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க அமைச்சர் மைக் பாம்போ இன்று  பயணம் மேற்கொள்வதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். தோகா, கத்தார் ஆகியவற்றுக்கு வரலாற்று சிறப்பு மிக்க பயணத்தை பாம்போ மேற்கொள்ள இருப்பதாகவும் அமெரிக்க நேரப்படி இன்று மாலை அவர் புறப்படுவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்